எங்கேயும் எப்போதும் :
முதல் காட்சியிலேயே கிளைமாக்ஸ் வைப்பதற்கு ஒரு தனி தில் வேண்டும், அறிமுக இயக்குனர் சரவணனிடம் நிறையவே இருக்கிறது ! இப்படி ஒரு படத்தை சொந்தமாக தயாரித்த ஏ.ஆர் .முருகதாஸ் அவர்களுக்கும் நன்றிகள் பல! திருச்சி டு சென்னை , சென்னை டு திருச்சி செல்லும் இரண்டு பேருந்துகளும் நேருக்கு நேராக மோதிக்கொள்கிறது முதல் காட்சியிலேயே , அந்த பேருந்தில் பயணம் செய்யும் முக்கிய கதாபாத்திரங்களான ஜெய் , அஞ்சலி , ஷ்ரவன் , அனன்யா. இவர்களின் ப்ளாஷ்பாக் கும் தான் இரண்டரை மணி நேர காவியமாய் செதுக்கி இருக்கிறார் சரவணன்.
திகில் படத்துக்கே உரிய பரபரப்பான வேகத்தில் பேருந்தை விட வேகமாக செல்கிறது திரைக்கதை, இம்மாதிரியான படங்களுக்கு திரைக்கதைதான் முதுகெலும்பு ! சின்ன கேரக்டர் களும் படத்தில் கலக்கல். அனனியாவின் அக்கா , மனைவியை விட்டு பிரிய முடியாமல் பேருந்தில் கூடவே வரும் கணவன், பேருந்தில் ஏறிய பெண்ணை பார்த்த வுடன் காதலிக்கும்
romeo . என பட்டியல் நீள்கிறது !ஷ்ராவந்த் அனன்யா இருவருக்கும் இருக்கும் காதல் தென்றல் என்றால் , ஜெய் அஞ்சலி சிவகாசி பட்டாசு ! கிட்டத்தட்ட லேடி கார்த்திக் அஞ்சலி ( மௌன ராகம் கார்த்திக்) இப்படி ஒரு பையன் நமக்கு கிடைக்க மாட்டானா என எல்லா பெண்களையும் ஏங்க வைக்கும் அளவுக்கு வாழ்ந்திருக்கிறார் ஜெய்.
மியூசிக் காமிரா இரண்டும் படத்தை இன்னும் விறு விருப்பாக்கி இருக்கிறது ! வசனமும் அருமை ,அனன்யா ஸ்ர்வந்திடம் " மொதல்ல நீங்க யாருன்னு தெரியல அதனால பயமா இருந்துச்சு , இப்போ நீங்க யாருன்னு தெரிஞ்சதால பயமா இருக்கு " என்று சொல்லும் இடம் கவிதை ! கிளைமாக்ஸ் காட்சியில் வரும் ரிங்க்டோன் " அப்பா போனை எடுங்கப்பா " இந்த காட்சியை பார்த்தால் கல் நெஞ்சும் கலங்கி விடும் !
படம் முடிந்த பிறகு, டைரக்டர் இந்த ஜோடியை ஏண்டா பிரிச்சான், கடைசி 15 நிமிடம் இவ்வளவு சோகம் தேவைதானா, இனிமேலாவது குடிதுவிட்டோ செல் போன் பேசிகொன்டோ செல்ல கூடாது; இம்மாதிரியான விவாதம் கண்டிப்பாக இருக்கும் ரசிகர்களிடம், அதுதான் டைரக்டர் ரின் வெற்றி ! குருவை மிஞ்சிய சிஷ்யன் !!
எனக்கு என்ன பயம்னா , தீபாவளிக்கு சென்னை டூ திருச்சி பஸ்ல போறதா வேண்டாமா என்பது தான்!
எழுதியது
-கிளாமங்கலம் விஜய.சிலம்பரசன்




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக