என்னைப் பற்றி

எனது படம்
தஞ்சை தமிழன் ! தரணியாள பிறந்தவன் !!

செவ்வாய், மே 28, 2013

தங்க மீன்கள் பாடல்கள்..என் பார்வையில்.


         விளம்பரங்களில், 'யுவனின் ஆன்மாவிலிருந்து இசை ' என்று ஏன் போட்டார்கள்  என்பது பாடல்களை கேட்கும்போது தான்  உணர்ந்தேன் .4 பாடல்களும் யுவனோட தி பெஸ்ட் லிஸ்ட்ல கண்டிப்பா சேரும்.4 தடவை கேட்டிங்கன்னா 400முறை கேட்டுகிட்டே இருப்பிங்க..!


' ஆனந்த யாழை மீட்டுகிறாய் ' பாடல் இளையராஜாவின் classic hits க்கு சற்றும் குறைந்ததல்ல .. யுவனின் இசையும் முத்துகுமாரின் வரிகளும் நமக்குள் ஆனந்த யாழை சத்தியமாக மீட்டுகிறது .

'நதிவெள்ளம் ' பாடலை கேட்டதிலிருந்து முத்துக்குமாருக்கும் ரசிகனாகிவிட்டேன் .வரிகளுக்கு வழி விட்ட யுவன் மீது மதிப்பு கூடுகிறது .!
"மலரொன்று வீழ்ந்தால் அதை ஏந்த பலர் ஓடுவார் ,
இலைகள் வீழ்ந்தால் சருகாகும் ..,
வறியவன் வாழ்கை இலை போலவே என்ற போதிலும்
சருகுகள் ஒரு நாள் உரமாகும்..! "
என்று எளிமையாய் இனிமையை ஈர்க்கிறார் கவிஞர்.

'யாருக்கும் தோழன்' பாட்டில், Orchestration  & Sound Mixing இல் தான் ஒரு ராஜ என்பதை மீண்டும் ஒரு முறை நிருபிக்கிறார் .

'First Last '   பள்ளி குழந்தைகளை பற்றிய பாடலில் குழந்தைகளுக்கு உரிய துள்ளல் தெரிகிறது ,யுவனின் இசையாயிற்றே !!

இந்த பாடல்களை AR ரஹ்மான் போட்டிருந்தால் ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து தள்ளியிருப்போம் !!!

                                   எழுதியது :விஜய.சிலம்பரசன்