ரஹ்மானின் இசைக்கு நான் அடிமை ஆனது ஒன்றும் உலக அதிசயம் இல்லை ஏனென்றல் உலகமே அதிசயமாய் பார்ப்பது ரஹ்மானை.
எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது .என் ஏழாம் வயதில் (1994 ) காதலன் படப் பாடல்கள் வெளியானது .நான் பள்ளிக்கு வேனில் சென்று வரும்போது அதை ஒலிக்கசெய்வார்கள் .நான் அந்த டிஜிட்டல் இசையில் மெய் சிலிர்த்து கேட்டுக்கொண்டே வருவேன்.40 நிமிடத்தில் வீடு வந்துவிடும் .நானோ 80 நிமிடங்கள் ஆவாதா என வேண்டிகொண்டிருப்பேன் .அதே ஆண்டு வெளியான ரங்கீலா பாடல்களால்,நான் ரஹ்மானின் வெறியனாகி போன இந்த சமயத்தில், DD - 1 சேனலில் ரஹ்மானின் ஹிந்தி பேட்டிஒரு சனிகிழமை இரவு ஒளிபரப்பானது.அன்றுதான் அவரை முதன் முதலாக பார்த்தது,அரைக்கை சட்டை அணிந்து நேர் வகிடெடுத்து தலை சீவியிருந்தார் . அன்று முதல் நானும் அவரைப்போல ஹேர் ஸ்டைல் வைக்க ஆசைப்பட்டேன் ஆனால் நான் படித்த பள்ளியில் உதை வாங்க பயந்து 6 ,7 வருடங்கள் கழித்து ஹேர் ஸ்டைலை மாற்றிக்கொண்டேன்.ஆனால் அதற்குள் மேஸ்ட்ரோ இரண்டு முறை தனது ஹேர் ஸ்டைலை மாற்றிகொண்டர் என்பது வேறு விஷயம் .(நம்மால ரஹ்மான் மாதிரி மியூசிக் எல்லாம் போட முடியாட்டியும் அவரை போல முடிய சீவி பாப்போமே ..)
மேஸ்ட்ரோ இசை சாம்ராஜ்யத்தின் அசைக்க முடியாத சக்ரவர்த்தியானர்.செலக்ட் செய்து பிளாப் படங்களுக்கா மியூசிக் போட்டாலும் ,உலகத்தரமான இசை என்பது யாராலும் மறுக்க முடியாது .அவரது பாடல்கள் வெளியானால் எனக்கு அது தான் தீபாவளி .
இந்நிலையில் பாபா படம் ஆரம்பம் ஆனது (2002) இசை ரஹ்மான் ..ஏகப்பட்ட பில்ட் அப் .வழக்கம் போல எப்படா வரும் மியூசிக் என்று வாயை பொளந்து கொண்டு காத்திருந்தேன் .தினமும் வகுப்பறையில் அதை பற்றியே பேச்சு .நண்பர்கள் அனைவரும் ரஜினி ரசிகர்கள் நான் உட்பட ,ஆர்வத்திற்கு கேட்கவா வேண்டும்.
ஒரு சுபயோக சுப தினத்தில் ரிலீஸ் ஆனது .அன்று மதியம் நண்பர்களோடு மதிய உணவு இடைவேளையில் சி.டி.கடைக்குசென்றோம்.(எங்க வீட்டில் அப்போது ரேடியோவே இல்ல ,நண்பனுக்கு வாங்கசென்றோம்)சி.டியை வாங்கியவுடன் நண்பன் கிளம்ப ...நானோ " மச்சான் ஒருதடவை போட்டு கேக்கலாமே" (இதற்குத்தானே ஆசைபட்டாய்..சிலம்பரசா...)கடைகாரரும் சி . டியை வாங்கி ப்ளே செய்தார்... ஒபெனிங் சாங் இடி மின்னல் என ஆரம்பம் ஆனது ..கரண்ட் கட். கிழிஞ்சது போ..!
கடுப்பாகி போன நாங்கள் ..ஏமாற்றத்தோடு திரும்பினோம் ! நான் ,ஒரு சில வினாடிகள் ஒலித்த அந்த டிஜிட்டல் இசையை பற்றியே பேசிக்கொண்டு வந்தேன்!!
மறுநாள் வகுப்பறை முழுதும் பாபா பாடல்களை பற்றிய பேச்சாகவே இருந்தது .நானோ அமைதியாய் பெஞ்சில் தலை கவிழ்த்து கேட்டுகொண்டிருந்தேன் .
இரண்டு நாட்கள் கழித்து வழக்கம்போல் அம்மாயி வீட்டிற்கு சென்று பால் வாங்கி திரும்பும்போது, ஏழரை மச்சான் வீட்டு loud ஸ்பீக்கர் ல் பாபா படத்து பாடல்கள் ....!"yes yes yes ",என சொல்லியபடி பனை மரத்தடியில் நின்று கேட்கலானேன்.மாயா ...மாயா.. பாட்டு ஒலித்துகொண்டிருந்தது .நான் கூஜாவை சரி செய்வதுபோல் பாசாங்கு செய்துகொண்டே..... கேட்டுகொண்டிருந்தேன்.திடிரென்று மாயா மாயாவை நிறுத்திய ஏழரை மச்சான் "எட்டு மடிப்பு சேலை"என்று கதற விட்டார்.நான் கூஜாவை பால் வழியாமல் சரிசெய்து கொண்டு கிளம்பினேன் .ஆனால் என்னையும் அறியாமல் என் கண்களில் வழிந்தது கண்ணீர்....
(பின்பு பாபா படம் வெளியாகி படு தோல்வி அடைந்ததும் ரஹ்மானின் இசையும் பெரும் விமர்சனதிர்க்குள்ளானதும்..உங்களுக்கே தெரிந்திருக்கும்)
சில வருடங்கள் கழித்து நான் DVD பிளேயர் வாங்கிய பிறகு எந்த பட்டை சத்தமாக வைத்து கேட்டிருப்பேன் என்பதை நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமா?!
எழுதியது : கிளாமங்கலம் விஜய.சிலம்பரசன்.