என்னைப் பற்றி

எனது படம்
தஞ்சை தமிழன் ! தரணியாள பிறந்தவன் !!

வெள்ளி, டிசம்பர் 28, 2012

அனிருத் : ரைஸிங் ஸ்டார்

கொலைவெறி புகழ் அனிருத் என்று இன்னமும் சொன்னா அது காமெடி !! அவர் அதெல்லாம் தண்டி அடுத்த கட்டத்துக்கு போய்ட்டார் எப்பவோ . ஆளு பாக்கிறதுக்கு இஷாந்த் ஷர்மா தம்பி மாதிரி இருக்காப்ளே !! அனா அவர மாதிரி   எல்லா பாலையும் வைடு லைன்கு நாலு கிலோமீட்டர் தள்ளி வீசாமால் , எல்லா  பாலையுமே போல்டை(ரசிகன்) குறி பார்க்கிறார் விகெட்டையும் அள்ளுகிறார் (ஹிட் பாடல்கள்)!!!



ரெண்டு படம்தானே மியூசிக் பண்ணியிருக்கார் அதுக்குள்ள ஏன் இப்டி சொம்பு அடிக்கிறே  அப்டின்னு சொன்னிங்கன்னா ! "3" படமே 30 படத்துக்கு சமம்ன்னு சொல்லுவேன் , எல்லா விதமான ஜானர்லேயும் பிரிச்சு மேஞ்சிருப்பாரு !! முக்கியமா background music செம,(திரை )இசை அமைப்பாளருக்கு பேர் சொல்றது back ground score தானே !!(நம்ம ஹாரிஸ்  காபி ராஜ்  BGM கேட்டாலே புரியும்) 

எனக்கு மியூசிக் பத்தி ஒன்னும் தெரியாது ;ராகம் ,தாளம் ஒரு எழவும் தெரியாது .ஆனா எல்ல விதமான மியூசிக் கும் கேக்கும் ரசிகனா சொல்றேன் அனிருத் தோட இசை அடுத்த தலைமுறைகானது !! 


லேட்டஸ்ட் ஆல்பம் "எதிர்நீச்சல் " லில் எல்லா  பாடல்களுமே தாறு மாறு ஹிட் !!" வெளிச்ச பூவே " பாட்டு எவர்க்ரீன் மெலடி !! யுவன் ஷங்கர் ராஜாவிற்கு நிஜமான போட்டின்னா அது அனிருத் தான் !!



                                                                                                                     எழுதியது                                                                                         
                                                                                                                     விஜய.சிலம்பரசன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக