என்னைப் பற்றி

எனது படம்
தஞ்சை தமிழன் ! தரணியாள பிறந்தவன் !!

வெள்ளி, டிசம்பர் 09, 2011

தமிழ் சினிமா போன மாசம்

தமிழ் சினிமா போன மாசம் :
                                   கடந்த மாதத்தில் வெளியான திரை படங்கள்  மற்றும் பாடல்களை பற்றிய ஒரு சிறு அலசல் ;

போதி தருமனை பார்த்து புல்லரித்து போன தமிழர்களுக்கு நவம்பர் மாதம் , சற்று தீனி குறைவுதான்.

முதலில் மயக்கம் என்ன , வழக்கமான செல்வாவின் டச்சோடு தனுஷ் நடிப்பில் புதிய பரிமாணத்தை தொட்ட படம் , ஒரு புகைப்பட கலைஞனின் வாழ்வின் வலியையும் மகிழ்ச்சியையும் அழகாய் வெளி படிதியிருந்தார்  தனுஷ் . ராம்ஜியின் காமெராவும் பிரகாஷின் இசையும் படத்தின் தூண்களாய் அமைந்திருந்தது :மயக்கம் என்ன, தனுஷின் நடிப்பில் இருந்த மயக்கம் செல்வாவின் இயக்கத்தில் சற்று குறைவுதான்.
 
வித்தகன் படத்தில் வித்தைகள் நிறைந்த வசனமும் திரைக்கதையும் இருந்தும் ,
ஏனோ படம் ஜெயிக்கவில்லை , வித்தகனாக  விஜயோ அஜித்தோ தோன்றியிருந்தால் ,,,,,.....????!!!!

பாடல்களை பொறுத்த வரையில் தமிழர்கள்  பெரும் சாதனையை நிகழ்த்தி இருக்கிறார்கள் . இளையராஜாவும் யுவனும் தெலுங்கு சினிமாவில் ரெகார்ட் பிரேக் செய்துள்ளார்கள்; ஆம் ராஜாவின் , ராமரஜ்யமும் யுவனின் பாஞ்சாவும் தான் தெலுங்கில் சாதனை படைத்து கொண்டிருக்கிறது ,தனுஷ் ஒரு படி மேலே போய் உலக அளவில்" கொல வெறி " கவிஞர் அவதாரம் எடுத்து இருக்கிறார்.
 

பாடகர் கார்த்திக் இசை அமைப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார் , இளையராஜாவும் ரஹ்மானும் கலந்த கலவையாய் இருக்கிறது அரவானின் பாடல்கள் .

இது போக கழுகு படத்தின் பாடல்களில் ஒன்றை யுவன் தனது உருக்கி எடுக்கும் குரலில் பாடியிருக்கிறார்.இந்த வருடத்தின் மிகசிறந்த மேலோடிகளில் நிச்சயம் இதுவும் இடம் பிடிக்கும் .

எழுதியவன் : கிளாமங்கலம் விஜய.சிலம்பரசன் .




வெள்ளி, நவம்பர் 04, 2011

உலக கிரிக்கெட்டின் கடவுள் சச்சின்

உலக கிரிக்கெட்டின் கடவுள் சச்சின் 

            எனக்கு புட்பால்னா சுத்தமா பிடிக்காது ஏன்னா இந்தியா அதுல பிரகாசிக்கவில்லை ,அதுபோல கிரிக்கெட்டும் எனக்கு பிடிக்காமல் போயிருக்கலாம் சச்சின் விளையாடாமல் போயிருந்தால் .

            விளையாட ஆரம்பித்து 22 வருடங்களுக்கு மேலகியும் இன்னும் காதல் குறையவில்லை கிரிக்கெட்டின் மேல் சச்சினுக்கு , எங்களுக்கும் காதல் குறையவில்லை சச்சின்மேல்!! 10 ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் கிரிக்கெட் பார்கிறோமென்றல்,சச்சின் பேட்டிங் செய்து கொண்டிருக்கிறார் என்று அர்த்தம் .அவர் அவுட் ஆகிவிட்டார் என்றால் நாங்கள் பேட்டை கையில் எடுத்துக்கொண்டு எங்கள் வேலையை பார்க்க கெளம்பி விடுவோம் .ஆமா பின்னே ,"சச்சின் இல்லாத மாட்ச்சும் பிகர் இல்லாத திருவிழாவும் ஒண்ணு" ன்னு சும்மாவா சொன்னங்க நம்ம முன்னோர்கள் .

                    சச்சின்னுக்கு வயதாகிவிட்டது என்று சொல்பவர்கள் , சச்சின் கேட்ச் பிடித்தவுடன் அவரின் முகபாவத்தை பார்த்திருக்க மாட்டார்கள் , ஒரு குழந்தையை போல் குதுகலத்துடன் அவர் கொண்டாடும் அழகே தனி . சச்சினின் வயதை காரணம் காட்டி அணியிலிருந்து விலகசொல்பவர்களை காட்டுமிராண்டிகள் எனவும் கூறலாம்.

                    சச்சின் விளையாட வந்த புதிதில் நடுகள ஆட்ட காரராகவே களமிறக்கப்பட்டார் .ஆனால் அவருக்கு தொடக்க வீரராகவே விருப்பம் ,எப்படியாவது ஒருநாள் வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை மட்டும் ஆழமாகவே இருந்தது .1990 களின் ஆரம்பத்தில் இந்திய அணி அசாரின் தலைமையில் நியூ சிலாந்து  சுற்றுபயணம் மேற்கொண்ட்டது.முதல் இரு ஒரு நாள் போட்டிகளிலும் சச்சின் வழக்கம் போல் 5 வது ஆளாகவே களமிறக்கப்பட்டார் . ஆடிகொருதரம் அமாவாசைக்கொருதரம் சிக்ஸர் அடித்து சிக்ஸர் சித்து என பெயர் வாங்கிய சித்துதான் அப்போதைய தொடக்க வீரர்களில் ஒருவர் . அவருக்கு 3 வது ஒரு நாள் போட்டியில் வயிற்றுபோக்கோ வாந்தியோ வந்ததால் அவரால் ஆடமுடியாத சூழ்நிலை வந்தது .

               இந்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது என கருதிய சச்சின் அசாரிடம் ஒரு குழந்தையை போல கெஞ்சி இருக்கிறார் ,"இந்த ஒரே  ஒருமுறை  நீங்கள் வாய்ப்பு தாருங்கள் இனிமேல் உங்களை தொந்தரவு செய்யமாட்டேன் " என காலில் விழாத குறைதான் , அசாரும் கொஞ்சம் மனமிறங்கி அந்த இளைஞனை தொடக்க வீரராக களமிறக்கினார்.

               நியூ சிலாந்தின் வேகபந்துவீச்சுக்கு சாதகமான பிட்சில் பந்துகள் கன்னாபின்னாவென்று பவுன்சாரகும் .ஆனால் சச்சினுக்கு மனதில் ஒரு குரல் ஒலிதிருக்கக்கூடும்,"பந்து எப்டி போட்டாலும் அடி ,நீ அடிக்கிற ஒவ்வொரு அடியும் உன்னோட எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்பதை மட்டும் மறக்காதே " என்றுதான் ஒலிதிருக்கும்போல. அன்று அவர் ஆடியது கிரிக்கெட் என்ற பெயரில் ருத்ர தாண்டவம் ,86  ரன்களில் ஓடி எடுத்ததைவிட சிக்ஸர்  ம் போரும் தான் அதிகம் .இதில் நாங்கள் கற்று கொண்டது ஒன்றே ஒன்றுதான் வாய்ப்பு எப்போதாவது ஒருமுறைதான் வரும் அப்போ நீ , முழிச்சுக்கோ பொழைச்சுக்கோ !!   

                சச்சின் மற்றவர்களை போல் வாய் சவடால் பேசியதில்லை ,மாறாக பேட்டால் பலருக்கு பதில் சொல்லியிருக்கிறார் ஒருமுறை ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் ஹென்றி ஒலங்கா ஓவரில் டக் அவுட் ஆகி வெளியேறினார் . அந்த போட்டி முடிவின்போது,ஒலங்கா அளித்த பேட்டியில்"சச்சினை ஆட்டமிழக்க வைப்பது ஒன்றும் கடினமானது அல்ல " என கூறி தொலைக்க .அடுத்த போட்டியில் மட்டையை பிடித்த சச்சின் ,சும்மா சாத்து சாத்து என சாத்தி எடுத்தார் .அதிலும் குறிப்பாக ஒலங்கா வின் பந்து வீச்சை தொம்சம் பண்ணிட்டுதான் அவுட் ஆனார் .இதுபோல வாயை கொடுத்து வாங்கி கட்டிகிட்டவர்கள் லிஸ்ட் அக்தர் ,வார்னே என பட்டியல் நீளும் . அதிலும் ,"ஏன் அடிப்பதற்கென்றே பிறந்தவர் சச்சின் " என்று வார்னே ஓபன் statement  விடும் அளவிர்க்கு இருந்தது கடவுளின் ஆட்டம் !

                       ஷர்ஜாஹ் வில் இந்தியா_ஆஸ்திரேலியா இடையே நடந்த ஒரு நாள் போட்டித்தொடரில் இறுதி ஆட்டங்களில் சச்சின் ஆடிய விதத்தை "பாலைவன சூறாவளி " என விமர்சகர்கள் அழைகிறார்கள்.இந்த போட்டிக்கு பிறகுதான் ஆஸ்திரேலியர்களின் தலைகனத்தை குறைத்தார் நம்ம தல !!

                          1999 ஆம் ஆண்டு உலக கோப்பை போட்டியின்போது அவர் தந்தை இறந்து விட ,இறுதி சடங்கில் கலந்து விட்டு உடனே போட்டிக்கு திரும்பி கென்யாவிற்கு எதிராக சதமடித்த பிறகு கலங்கிய கண்களுடன் பேட்டை உயர்த்தி உன் தந்தைக்கு அஞ்சலி செலுத்தினாயே ,அன்று நாடே உன்னை வணங்கியது .

                       இந்தியர்களுக்கு கிரிக்கெட் என்பது மதமென்றல் , சச்சின் தான் என்றென்றும் கடவுள் . சச்சின் கிரிக்கெட் விளையாட்டும் காலத்தில் நான் வாழ்கிறேன் என்ற பெருமையே எனக்கு போதும் !!
     
                             




Udanz

புதன், அக்டோபர் 19, 2011

ஷங்கர் டக்கர் என்னும் உன்னத கலைஞன்(இசை)

ஷங்கர் டக்கர் என்னும் உன்னத கலைஞன் :



போதி குருமன் யாரென்று, சாரி போதி தருமன் யாரென்று இந்தியாவே எதிர் நோக்கி காத்திருக்கும் வேளையில் ஷங்கர் டக்கர் யாரென்று தெரிந்து கொள்வோமா?

நம்ம ஒரு அப்பாடக்கருங்க , ஆங்கில ஹிப் பாப் ஆல்பத்தை காப்பி அடிபதையும்        , கேட்பதையுமே பெருமையாக நினைக்கும் கலிகாலத்தில் , பாஸ்டன் நகரில் பிறந்து வளர்ந்த ஷங்கர் டக்கர் , இந்திய இசையை , குறிப்பாக கர்நாடக சங்கீதத்தை காதலித்து, இசைஅமைத்து youtube channel ல் பெரிய ரசிகர் பட்டாளதையே உருவாக்கி ,இப்போது மும்பையில் வசிக்கும் ஷங்கர் டக்கர் உண்மையிலேயே பெரிய அப்பாடக்கர் தான்!!!

இந்த பாடலை நம்ம ஊரு ஆளுங்க பாடியதை கேட்டால் தலையை என்னமோ பண்ணும் , ஆனால் நம்ம ஷங்கரின் இசை அமைப்பில் கேக்கும்போது அடடா இதயத்தை என்னவோ செய்கிறது ! இந்த பாடலை பாடியிருக்கும் வித்யா -வந்தனா அவ்ளோ அழகு !!


 Hariprasad Chaurasia, Zakir Hussain, John Mclaughlin, Radio Head, AR Rahman  ஆகியோரின் ஆசிபெற்றவர் !!!

நம்ம AR Rahman  ன் முன்பே வா பாடலை ரீமிக்ஸ் இல்லை ரீமேக் செய்திருக்கும் நேர்த்தியை பாருங்கள் (எல்லா இசை கருவியும் இவரே வாசித்திருப்பார் !!


I love you Shankar Tucker.

எழுதியது கிளாமங்கலம் விஜய.சிலம்பரசன் .

புதன், அக்டோபர் 12, 2011

சூர்யாவிற்கு வாழ்வு தந்த அஜித்

சூர்யாவிற்கு வாழ்வு தந்த அஜித் 

சூர்யா திரைவுலகிற்குள் நுழைய காரணமே அஜித் என்று சொன்னால் , நீங்கள் நம்புவீர்களா ? ஆனால் நம்பித்தான் ஆகவேண்டும் . 

1997 ஆம் ஆண்டு இயக்குனர்  வசந்த், அஜித் விஜய் இருவரையும் இணைத்து நேருக்கு நேர் என்ற படத்தை ஆரம்பித்தார் ,அஜித்தும் 10 நாட்கள் வரை நடித்து விட்டு திடீரென விலகி கொண்டார் , கால்ஷீட் பிரச்சனை தான்  காரணமாக சொல்லப்பட்டது .(ஆனால் பின்னணியில் டாக்டர் அணிலின் தந்தை இருந்தார் என்று கிசுகிசுக்க பட்டது )

பிறகு வசந்த் வேறு ஒரு நடிகரை தேட ,   திருப்பூரில் வேலை பார்த்துகொண்டிருந்த நடிகர் சிவகுமாரின் மகன் சரவணனை பார்த்து சூர்யாவாக மாற்றினார்!! ஆக , சூர்யா என்ட்ரி ஆனதே அஜித் அவுட் ஆனதால்தான் !!!

சேது என்றொரு மகத்தான படைப்பை உருவாக்கி ,இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த பாலா தனது அடுத்த (நந்தா )படத்தில் நடிக்க வைக்க விரும்பியது அஜித்தை ,ஷூட்டிங் ஆரம்பிக்கும் முன்பு இருவருக்கும் கருத்துவேறுபட்டு பிரிந்துவிட்டார்கள் ! நேருக்கு நேர் படத்திற்கு பிறகு 2 , 3  படத்தில் நடித்திருந்தாலும்  கிட்டத்தட்ட காணாமலே போய்விட்ட சூர்யாவுக்கு அடித்தது லக் ,  சூர்யாவிற்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது நந்தா தான் என்றாலும், திருப்புமுனை ஏற்பட காரணமாய் இருந்தது அஜித்.


நந்தா படத்தில் சிறந்த நடிகர் என்று பேர் வாங்கி விட்டாலும் , வெற்றி பட ஹீரோக்கள் வரிசையை பிடிப்பது எட்டாகனியாகவே இருந்தது சூர்யாவிற்கு . 


மின்னலே வெற்றிக்கு பிறகு கௌதம் போலீஸ் கதையொன்றை அஜித்தை வைத்து ஆரம்பித்தார் , வழக்கம் போலவே ட்ராப் ஆகிவிட , சூர்யா உள்ளே  வந்தார் ,படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு சூர்யாவையும் முன்னணி ஹீரோவாக்கியது! அதோடு ஜோதிகாவுடன் நெருக்கமும் அதிகரித்தது !!

ஏ.ஆர்.முருகதாஸ் தீனாவிற்கு பிறகு அஜித்தோடு மீண்டும் கைகோர்த்த படம் "மிரட்டல் " , இம்முறை தயாரிப்பாளரோடு ஏற்பட்ட பிரச்சனையால் படம் ட்ராப் ஆனது பிறகு கஜினி என்று பெயர் மாறி  சூர்யாவை வசூல் நாயகனாக மாற்றியது .

இப்போது புரிகிறதா  தலைப்பிற்க்கான அர்த்தம் ?! தெரிந்தோ தெரியாமலோ அஜித் சூர்யாவிற்கு வாழ்வு தந்திருக்கிறார் என்பது உண்மைதானே ?!!!

                 எழுதியது ---- கிளாமங்கலம் - விஜய சிலம்பரசன்  
                                        

திங்கள், அக்டோபர் 03, 2011

வாகை சூடிய சற்குணம்

வாகை சூடிய சற்குணம் :

களவாணி யின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின் வந்திருக்கும் , வாகை சூடவா எந்த வகையில்  சர்குனதிற்கு  வாகை சூடியிருக்கிறது என்று பார்ப்போம் . 1966 ஆம் ஆண்டில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு எடுத்திருக்கிறார் . செங்கல் சூளை தொழில் செய்யும்    ஒரு கிராமமே  ஆண்டை பொன்வண்ணனின் அடிமைகளாக    இருக்கிறது! கல்வியறிவு இல்லாத மக்களின் உழைப்பை உறிஞ்சி , சம்பளமாக குறைவான கூலியை தருகிறார் !

இந்நிலையில் அந்த கிராமதிற்கு , கிராம சேவா அமைப்பில் இருந்து வாத்தியார் உத்தியோகம் பார்க்க வரும் விமல் !



அங்குள்ள  குழந்தைகளின் அறியாமை யை  போக்கி , அந்த கிராமத்து பெண்ணையே , திருமணமும் செய்கிறார் .


இந்த கதையை உலக சினிமா தரத்திற்கு எடுத்திருக்கிறார் , உலக சினிமா வை காபி அடிக்காமல் !!

திரையில் M.G.R ய் நம்பியார் அடிக்கும் காட்சியை பார்த்து குறவர்  துப்பாக்கியால் திரையை சுடும் ஆரம்ப காட்சியே அமர்க்களம் !
சிறுவர்களிடமும் , ஆட்டுகாரநிடமும் விமல் மாட்டிக்கொண்டு  முழிக்கும் ஆரம்ப காட்சிகள் கல கல ...,. அறிமுக நாயகி இனியாவின் அழகும் நடிப்பும் பாரதிராஜா வின் கதாநாயகியை நினைவுட்டுகிறது .
குருவிக்காரனின் மேக் அப்பும் அவரது பின்னணியும் சினிமாவிற்கு புதியது ,பாக்யராஜ் , பொன்வண்ணன் இருவரும் நான்கைந்து காட்சிகளே வந்தாலும் நிறைவான நடிப்பை தந்திருக்கிரர்கள்.

தஞ்சாவூர் வட்டார  பேச்சு வழக்கை அற்புதமாக கையாண்டுள்ளார் , (அக்காவை "அக்காயி" என்று அழைப்பது ) எங்க அண்ணையா சற்குணம் !
குருவிக்காரனின் மரணத்துக்கு பிறகு வைக்கும் ஒப்பாரியில்  அசல் தஞ்சை கிராமத்தை கண் முன் நிறுத்துகிறார் அண்ணையா . 
1960  இல் நடக்கும் கதையென்பதால் பார்த்து பார்த்து நிறைய விசயங்களை  சேர்த்துள்ளார் கலை இயக்குனரோடு கை கோர்த்து. இலங்கை வானொலியும் ஒரு கதாபாத்திரமாக வருகிறது .
படத்தின் இரு பெரும் தூண்கள் இசையும் கேமராவும் ! ஒவ்வொரு காட்சியும் சிற்பம் போல் செதுக்கி இருக்கிறார் இயக்குனர் என்றால், ஓம் பிரகாஷின் ஒளிபதிவிலோ  கவிதையும் ஓவியமும் சேர்ந்து இருக்கிறது! படம் முழுக்க மஞ்சள் நிறதில்  லைட்டிங்  அமைத்து  கலக்கியிருக்கிறார்!

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பிறகு முதல் படத்திலேயே ஸ்கோர் செய்தது ஜிப்ரன் தான் . பின்னணியிலும் பாடல்  களிலும் உயிரோட்டமான இசை ! மிகப்பெரிய எதிர்காலம் இருக்கிறது !

  கேவலமான பொறாமை பிடித்து  இந்த படத்தை பற்றி தவறாக பேசுபவர்களை  , (படத்தில் சிறுவன் ஒருவன், "தேடியும் ஆப்டலை சார்" என்பதை தவறாக புரிந்து கொண்டு விமல் வெளுப்பர்) அந்த வார்த்தையை கொண்டுதான் நாம் திட்ட வேண்டும் !

படத்தை பற்றி விரிவாக எழுத ஆரம்பித்தால் ஒரு புத்தகமே போடலாம் !!

திரையில் ஒரு இலக்கியத்தை படைத்திருக்கும் எங்கள் அண்ணையா சற்குணத்தை இறுக்கி அணைத்து ஒரு உம்மா கொடுக்க வேண்டும் போல் இருந்தது ! படம் முடிந்தவுடன் !


  எழுதியது : கிளாமங்கலம் விஜய.சிலம்பரசன் .


வியாழன், செப்டம்பர் 29, 2011

ஏழாம் அறிவு பாடல்களும் ஹாரிஸ் ஜெயராஜின் அயோக்யதனமும்

ஏழாம் அறிவு பாடல்களும்  ஹாரிஸ் ஜெயராஜின் அயோக்யதனமும்
    
காபி அடிப்பதற்கும்  தனி திறமை  இருக்க வேண்டும் , நம்ம G.V. தேவா போல் !  எங்கேருந்து சுட்டது என கண்டு பிடிபதர்க்குள் பாடல் அனைத்தும் ஹிட் ஆகி விடும்.!!

ஆனால் நம்ம ஹரிஸ் க்கு  அந்த திறமை சுத்தமாக இல்லை என்பதை மீண்டும் ஒரு முறை அழுத்தமாக நிருபித்துள்ளார் . 
1 )  டாக்ஸி டாக்ஸி + அயன் +கோ= ரிங்கா சாங்
2) கண்ணும் கண்ணும் நோக்கியா+இரும்பிலே  ஒரு = ஏலே லாமா
3) கண்ணே கலை மானே +இளையராஜாவின் சோக பாடல்கள் =யம்மா யம்மா 
4) கப்பலேறி போயாச்சு + அச்சம் அச்சம் இல்லை + ஜன கன மன = தோழா 
5) 12 B பூவே வாய் பேசும் + ரஹ்மான் மெலோடிஸ் = முன் பனி
6) குரு படத்தில் வரும் நம்தரே நம்தரே + ஒன்ஸ் அபான் டைம் இன் சீனா =  சீன      
                                                                                              மொழி பாடல் !

ஏ.ஆர்.முருகதாஸ் க்கு இது ஒருஒரு பாடம் , இனிமேலாவது, இந்த காபிராஜிடம்   
சிக்காமல் இருக்க வேண்டும் என நாம் வேண்டிகொள்வோம் !!! 


அடுத்த படியாக  ஹாரிஸ் ஷோ நடத்த போகிறாராம்  மாட்டிக்கொள்ள போகிறார் ! ஒரே  விதமான மெட்டு போட்டு மொக்கை போடுவது  கொஞ்சம் நஞ்சம் பேருக்காவது , தெரியாமல் இருந்தது ! ஆனால் இனி ?????


வியாழன், செப்டம்பர் 22, 2011

திரைப்பார்வை

எங்கேயும்   எப்போதும் :   
முதல் காட்சியிலேயே கிளைமாக்ஸ்  வைப்பதற்கு ஒரு தனி  தில்  வேண்டும்,   அறிமுக  இயக்குனர் சரவணனிடம் நிறையவே இருக்கிறது ! இப்படி ஒரு படத்தை  சொந்தமாக தயாரித்த ஏ.ஆர் .முருகதாஸ் அவர்களுக்கும் நன்றிகள் பல! திருச்சி டு சென்னை , சென்னை டு திருச்சி செல்லும் இரண்டு பேருந்துகளும் நேருக்கு நேராக மோதிக்கொள்கிறது  முதல் காட்சியிலேயே , அந்த பேருந்தில் பயணம் செய்யும் முக்கிய கதாபாத்திரங்களான ஜெய் , அஞ்சலி , ஷ்ரவன் , அனன்யா. இவர்களின் ப்ளாஷ்பாக் கும்  தான் இரண்டரை மணி நேர காவியமாய் செதுக்கி இருக்கிறார் சரவணன்.
              
திகில் படத்துக்கே உரிய பரபரப்பான வேகத்தில் பேருந்தை விட வேகமாக செல்கிறது திரைக்கதை, இம்மாதிரியான  படங்களுக்கு திரைக்கதைதான் முதுகெலும்பு ! சின்ன கேரக்டர் களும் படத்தில் கலக்கல். அனனியாவின் அக்கா , மனைவியை விட்டு பிரிய முடியாமல் பேருந்தில் கூடவே வரும் கணவன், பேருந்தில் ஏறிய பெண்ணை பார்த்த வுடன் காதலிக்கும்
romeo . என பட்டியல் நீள்கிறது !

ஷ்ராவந்த் அனன்யா இருவருக்கும் இருக்கும் காதல் தென்றல் என்றால் , ஜெய் அஞ்சலி சிவகாசி பட்டாசு ! கிட்டத்தட்ட லேடி கார்த்திக் அஞ்சலி ( மௌன ராகம் கார்த்திக்) இப்படி ஒரு பையன் நமக்கு கிடைக்க மாட்டானா என எல்லா பெண்களையும் ஏங்க வைக்கும் அளவுக்கு வாழ்ந்திருக்கிறார் ஜெய்.




மியூசிக் காமிரா இரண்டும் படத்தை இன்னும் விறு விருப்பாக்கி இருக்கிறது ! வசனமும் அருமை ,அனன்யா ஸ்ர்வந்திடம் " மொதல்ல நீங்க யாருன்னு தெரியல அதனால பயமா இருந்துச்சு  , இப்போ நீங்க யாருன்னு தெரிஞ்சதால பயமா இருக்கு " என்று சொல்லும் இடம்  கவிதை ! கிளைமாக்ஸ் காட்சியில் வரும் ரிங்க்டோன் " அப்பா போனை எடுங்கப்பா " இந்த காட்சியை பார்த்தால் கல் நெஞ்சும் கலங்கி விடும் !

படம் முடிந்த பிறகு, டைரக்டர்  இந்த ஜோடியை ஏண்டா  பிரிச்சான், கடைசி 15  நிமிடம் இவ்வளவு சோகம் தேவைதானா, இனிமேலாவது குடிதுவிட்டோ செல் போன் பேசிகொன்டோ செல்ல கூடாது; இம்மாதிரியான விவாதம் கண்டிப்பாக இருக்கும் ரசிகர்களிடம், அதுதான் டைரக்டர் ரின் வெற்றி ! குருவை மிஞ்சிய சிஷ்யன் !!

எனக்கு என்ன பயம்னா , தீபாவளிக்கு சென்னை டூ திருச்சி பஸ்ல போறதா வேண்டாமா என்பது தான்!

எழுதியது

-கிளாமங்கலம் விஜய.சிலம்பரசன்

செவ்வாய், செப்டம்பர் 20, 2011

மயக்கம் என்ன : இசை விமர்சனம்

G.V.பிரகாஷ் +செல்வா என்றதும் எதிர்ப்பார்த்து கேட்டால் ஏமாற்றமே !
வழக்கம் போல தனது பாடல்களையே ரீமிக்ஸ் செய்து உள்ளார் !! பாடல்களில் கற்பனை வறட்சி அதிகம் , தனுஷும் செல்வாவும் பாட்டு எழுதினால் பிறகெப்படி இருக்கும் !!! யுவன் + செல்வா+நா.முத்துக்குமார் இவர்களிடம் இருந்த உயிர்ப்பான இசை இல்லை இந்த ஆல்பத்தில் என்பதே உண்மை !

இது என்னுடைய தனிப்பட்ட கருத்து மட்டுமே !
-கிளாமங்கலம் விஜய.சிலம்பரசன் .