என்னைப் பற்றி

எனது படம்
தஞ்சை தமிழன் ! தரணியாள பிறந்தவன் !!

செவ்வாய், மே 28, 2013

தங்க மீன்கள் பாடல்கள்..என் பார்வையில்.


         விளம்பரங்களில், 'யுவனின் ஆன்மாவிலிருந்து இசை ' என்று ஏன் போட்டார்கள்  என்பது பாடல்களை கேட்கும்போது தான்  உணர்ந்தேன் .4 பாடல்களும் யுவனோட தி பெஸ்ட் லிஸ்ட்ல கண்டிப்பா சேரும்.4 தடவை கேட்டிங்கன்னா 400முறை கேட்டுகிட்டே இருப்பிங்க..!


' ஆனந்த யாழை மீட்டுகிறாய் ' பாடல் இளையராஜாவின் classic hits க்கு சற்றும் குறைந்ததல்ல .. யுவனின் இசையும் முத்துகுமாரின் வரிகளும் நமக்குள் ஆனந்த யாழை சத்தியமாக மீட்டுகிறது .

'நதிவெள்ளம் ' பாடலை கேட்டதிலிருந்து முத்துக்குமாருக்கும் ரசிகனாகிவிட்டேன் .வரிகளுக்கு வழி விட்ட யுவன் மீது மதிப்பு கூடுகிறது .!
"மலரொன்று வீழ்ந்தால் அதை ஏந்த பலர் ஓடுவார் ,
இலைகள் வீழ்ந்தால் சருகாகும் ..,
வறியவன் வாழ்கை இலை போலவே என்ற போதிலும்
சருகுகள் ஒரு நாள் உரமாகும்..! "
என்று எளிமையாய் இனிமையை ஈர்க்கிறார் கவிஞர்.

'யாருக்கும் தோழன்' பாட்டில், Orchestration  & Sound Mixing இல் தான் ஒரு ராஜ என்பதை மீண்டும் ஒரு முறை நிருபிக்கிறார் .

'First Last '   பள்ளி குழந்தைகளை பற்றிய பாடலில் குழந்தைகளுக்கு உரிய துள்ளல் தெரிகிறது ,யுவனின் இசையாயிற்றே !!

இந்த பாடல்களை AR ரஹ்மான் போட்டிருந்தால் ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து தள்ளியிருப்போம் !!!

                                   எழுதியது :விஜய.சிலம்பரசன்


வியாழன், ஜனவரி 10, 2013

The Best Of 2012

சிறந்த படம்                     :              வழக்கு எண் 18/9,மது பான கடை ,நடுவுல கொஞ்சம்                                              பக்கத்த காணும் .

சிறந்த ஹிந்தி  படம்           : பர்பி

சிறந்த நடிகர் (ஹிந்தி ): ரன்பீர் கபூர் (பர்பி)


சிறந்த நடிகர்            : விஜய் சேதுபதி (pizza ,சுந்தரபாண்டியன்,நடுவுல கொஞ்ச....)

மாஸ் ஹீரோ 2012          :    கிராபிக்ஸ்  ஈ (நான் ஈ )

சிறந்த நடிகை                   : சமந்தா (நீதானே என் பொன்வசந்தம் )         

சிறந்த வில்லன்                  : சுதீப்  (நான் ஈ )

சிறந்த இயக்குனர் :             பாலாஜி சக்தி வேல் 

சிறந்த திரைக்கதை :       மகிழ் திருமேனி (தடையற தாக்க)

சிறந்த வசனம்  :               கமலகண்ணன் (மது பானகடை) 

சிறந்த கதை        :             வழக்கு எண் 18/9 ( பாலாஜி சக்திவேல்)

சிறந்த ஒளிப்பதிவு :      சுகுமார் (கும்கி)

சிறந்த ஒலிப்பதிவு  :       ரசூல் பூக்குட்டி ( 3)

சிறந்த படத்தொகுப்பு  :            பிரவீன் -ஸ்ரீகாந்த் (தடையற தாக்க)

சிறந்த இசையமைப்பாளர்  :          அனிருத் (3)

சிறந்த பின்னணி இசை:            சந்தோஷ் நாராயணன் ( pizza )

சிறந்த பின்னணி பாடகர் :        ஹரிசரண் (கும்கி ,அய்யய்யோ ....)

சிறந்த பாடலாசிரியர்    :         வைரமுத்து ( நீர்பறவை )

 சிறந்த துணை நடிகர் :             பகவதி பெருமாள்(நடுவுல கொஞ்சம்...)

சிறந்த குணசித்திர நடிகர் :    தம்பி ராமையா (கும்கி)

சிறந்த குணசித்திர நடிகை : சரண்யா பொன்வண்ணன் ( ஓகே ஓகே ,நீர்பறவை 

சிறந்த நகைச்சுவை  நடிகர் :  சந்தானம் ,சூரி (சுந்தர பாண்டியன்)

பண்பலை தொகுப்பாளர்      :   விக்னேஷ்காந்த் (ஆஹா fm ) பாலாஜி (பிக் fm )

சிறந்த  தொலைகாட்சி        :  DISCOVERY  தமிழ்

மொக்கை படம் 2012 :  முப்பொழுதும் உன் கற்பனைகள்,முகமூடி,தாண்டவம்,பாஹன்,மாற்றான் .