உலக கிரிக்கெட்டின் கடவுள் சச்சின்
விளையாட ஆரம்பித்து 22 வருடங்களுக்கு மேலகியும் இன்னும் காதல் குறையவில்லை கிரிக்கெட்டின் மேல் சச்சினுக்கு , எங்களுக்கும் காதல் குறையவில்லை சச்சின்மேல்!! 10 ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் கிரிக்கெட் பார்கிறோமென்றல்,சச்சின் பேட்டிங் செய்து கொண்டிருக்கிறார் என்று அர்த்தம் .அவர் அவுட் ஆகிவிட்டார் என்றால் நாங்கள் பேட்டை கையில் எடுத்துக்கொண்டு எங்கள் வேலையை பார்க்க கெளம்பி விடுவோம் .ஆமா பின்னே ,"சச்சின் இல்லாத மாட்ச்சும் பிகர் இல்லாத திருவிழாவும் ஒண்ணு" ன்னு சும்மாவா சொன்னங்க நம்ம முன்னோர்கள் .
எனக்கு புட்பால்னா சுத்தமா பிடிக்காது ஏன்னா இந்தியா அதுல பிரகாசிக்கவில்லை ,அதுபோல கிரிக்கெட்டும் எனக்கு பிடிக்காமல் போயிருக்கலாம் சச்சின் விளையாடாமல் போயிருந்தால் .
விளையாட ஆரம்பித்து 22 வருடங்களுக்கு மேலகியும் இன்னும் காதல் குறையவில்லை கிரிக்கெட்டின் மேல் சச்சினுக்கு , எங்களுக்கும் காதல் குறையவில்லை சச்சின்மேல்!! 10 ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் கிரிக்கெட் பார்கிறோமென்றல்,சச்சின் பேட்டிங் செய்து கொண்டிருக்கிறார் என்று அர்த்தம் .அவர் அவுட் ஆகிவிட்டார் என்றால் நாங்கள் பேட்டை கையில் எடுத்துக்கொண்டு எங்கள் வேலையை பார்க்க கெளம்பி விடுவோம் .ஆமா பின்னே ,"சச்சின் இல்லாத மாட்ச்சும் பிகர் இல்லாத திருவிழாவும் ஒண்ணு" ன்னு சும்மாவா சொன்னங்க நம்ம முன்னோர்கள் . சச்சின்னுக்கு வயதாகிவிட்டது என்று சொல்பவர்கள் , சச்சின் கேட்ச் பிடித்தவுடன் அவரின் முகபாவத்தை பார்த்திருக்க மாட்டார்கள் , ஒரு குழந்தையை போல் குதுகலத்துடன் அவர் கொண்டாடும் அழகே தனி . சச்சினின் வயதை காரணம் காட்டி அணியிலிருந்து விலகசொல்பவர்களை காட்டுமிராண்டிகள் எனவும் கூறலாம்.
சச்சின் விளையாட வந்த புதிதில் நடுகள ஆட்ட காரராகவே களமிறக்கப்பட்டார் .ஆனால் அவருக்கு தொடக்க வீரராகவே விருப்பம் ,எப்படியாவது ஒருநாள் வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை மட்டும் ஆழமாகவே இருந்தது .1990 களின் ஆரம்பத்தில் இந்திய அணி அசாரின் தலைமையில் நியூ சிலாந்து சுற்றுபயணம் மேற்கொண்ட்டது.முதல் இரு ஒரு நாள் போட்டிகளிலும் சச்சின் வழக்கம் போல் 5 வது ஆளாகவே களமிறக்கப்பட்டார் . ஆடிகொருதரம் அமாவாசைக்கொருதரம் சிக்ஸர் அடித்து சிக்ஸர் சித்து என பெயர் வாங்கிய சித்துதான் அப்போதைய தொடக்க வீரர்களில் ஒருவர் . அவருக்கு 3 வது ஒரு நாள் போட்டியில் வயிற்றுபோக்கோ வாந்தியோ வந்ததால் அவரால் ஆடமுடியாத சூழ்நிலை வந்தது .
இந்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது என கருதிய சச்சின் அசாரிடம் ஒரு குழந்தையை போல கெஞ்சி இருக்கிறார் ,"இந்த ஒரே ஒருமுறை நீங்கள் வாய்ப்பு தாருங்கள் இனிமேல் உங்களை தொந்தரவு செய்யமாட்டேன் " என காலில் விழாத குறைதான் , அசாரும் கொஞ்சம் மனமிறங்கி அந்த இளைஞனை தொடக்க வீரராக களமிறக்கினார்.
நியூ சிலாந்தின் வேகபந்துவீச்சுக்கு சாதகமான பிட்சில் பந்துகள் கன்னாபின்னாவென்று பவுன்சாரகும் .ஆனால் சச்சினுக்கு மனதில் ஒரு குரல் ஒலிதிருக்கக்கூடும்,"பந்து எப்டி போட்டாலும் அடி ,நீ அடிக்கிற ஒவ்வொரு அடியும் உன்னோட எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்பதை மட்டும் மறக்காதே " என்றுதான் ஒலிதிருக்கும்போல. அன்று அவர் ஆடியது கிரிக்கெட் என்ற பெயரில் ருத்ர தாண்டவம் ,86 ரன்களில் ஓடி எடுத்ததைவிட சிக்ஸர் ம் போரும் தான் அதிகம் .இதில் நாங்கள் கற்று கொண்டது ஒன்றே ஒன்றுதான் வாய்ப்பு எப்போதாவது ஒருமுறைதான் வரும் அப்போ நீ , முழிச்சுக்கோ பொழைச்சுக்கோ !!
சச்சின் மற்றவர்களை போல் வாய் சவடால் பேசியதில்லை ,மாறாக பேட்டால் பலருக்கு பதில் சொல்லியிருக்கிறார் ஒருமுறை ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் ஹென்றி ஒலங்கா ஓவரில் டக் அவுட் ஆகி வெளியேறினார் . அந்த போட்டி முடிவின்போது,ஒலங்கா அளித்த பேட்டியில்"சச்சினை ஆட்டமிழக்க வைப்பது ஒன்றும் கடினமானது அல்ல " என கூறி தொலைக்க .அடுத்த போட்டியில் மட்டையை பிடித்த சச்சின் ,சும்மா சாத்து சாத்து என சாத்தி எடுத்தார் .அதிலும் குறிப்பாக ஒலங்கா வின் பந்து வீச்சை தொம்சம் பண்ணிட்டுதான் அவுட் ஆனார் .இதுபோல வாயை கொடுத்து வாங்கி கட்டிகிட்டவர்கள் லிஸ்ட் அக்தர் ,வார்னே என பட்டியல் நீளும் . அதிலும் ,"ஏன் அடிப்பதற்கென்றே பிறந்தவர் சச்சின் " என்று வார்னே ஓபன் statement விடும் அளவிர்க்கு இருந்தது கடவுளின் ஆட்டம் !
ஷர்ஜாஹ் வில் இந்தியா_ஆஸ்திரேலியா இடையே நடந்த ஒரு நாள் போட்டித்தொடரில் இறுதி ஆட்டங்களில் சச்சின் ஆடிய விதத்தை "பாலைவன சூறாவளி " என விமர்சகர்கள் அழைகிறார்கள்.இந்த போட்டிக்கு பிறகுதான் ஆஸ்திரேலியர்களின் தலைகனத்தை குறைத்தார் நம்ம தல !!
1999 ஆம் ஆண்டு உலக கோப்பை போட்டியின்போது அவர் தந்தை இறந்து விட ,இறுதி சடங்கில் கலந்து விட்டு உடனே போட்டிக்கு திரும்பி கென்யாவிற்கு எதிராக சதமடித்த பிறகு கலங்கிய கண்களுடன் பேட்டை உயர்த்தி உன் தந்தைக்கு அஞ்சலி செலுத்தினாயே ,அன்று நாடே உன்னை வணங்கியது .
இந்தியர்களுக்கு கிரிக்கெட் என்பது மதமென்றல் , சச்சின் தான் என்றென்றும் கடவுள் . சச்சின் கிரிக்கெட் விளையாட்டும் காலத்தில் நான் வாழ்கிறேன் என்ற பெருமையே எனக்கு போதும் !!

