என்னைப் பற்றி

எனது படம்
தஞ்சை தமிழன் ! தரணியாள பிறந்தவன் !!

வெள்ளி, டிசம்பர் 28, 2012

அனிருத் : ரைஸிங் ஸ்டார்

கொலைவெறி புகழ் அனிருத் என்று இன்னமும் சொன்னா அது காமெடி !! அவர் அதெல்லாம் தண்டி அடுத்த கட்டத்துக்கு போய்ட்டார் எப்பவோ . ஆளு பாக்கிறதுக்கு இஷாந்த் ஷர்மா தம்பி மாதிரி இருக்காப்ளே !! அனா அவர மாதிரி   எல்லா பாலையும் வைடு லைன்கு நாலு கிலோமீட்டர் தள்ளி வீசாமால் , எல்லா  பாலையுமே போல்டை(ரசிகன்) குறி பார்க்கிறார் விகெட்டையும் அள்ளுகிறார் (ஹிட் பாடல்கள்)!!!



ரெண்டு படம்தானே மியூசிக் பண்ணியிருக்கார் அதுக்குள்ள ஏன் இப்டி சொம்பு அடிக்கிறே  அப்டின்னு சொன்னிங்கன்னா ! "3" படமே 30 படத்துக்கு சமம்ன்னு சொல்லுவேன் , எல்லா விதமான ஜானர்லேயும் பிரிச்சு மேஞ்சிருப்பாரு !! முக்கியமா background music செம,(திரை )இசை அமைப்பாளருக்கு பேர் சொல்றது back ground score தானே !!(நம்ம ஹாரிஸ்  காபி ராஜ்  BGM கேட்டாலே புரியும்) 

எனக்கு மியூசிக் பத்தி ஒன்னும் தெரியாது ;ராகம் ,தாளம் ஒரு எழவும் தெரியாது .ஆனா எல்ல விதமான மியூசிக் கும் கேக்கும் ரசிகனா சொல்றேன் அனிருத் தோட இசை அடுத்த தலைமுறைகானது !! 


லேட்டஸ்ட் ஆல்பம் "எதிர்நீச்சல் " லில் எல்லா  பாடல்களுமே தாறு மாறு ஹிட் !!" வெளிச்ச பூவே " பாட்டு எவர்க்ரீன் மெலடி !! யுவன் ஷங்கர் ராஜாவிற்கு நிஜமான போட்டின்னா அது அனிருத் தான் !!



                                                                                                                     எழுதியது                                                                                         
                                                                                                                     விஜய.சிலம்பரசன் 

திங்கள், ஜூலை 16, 2012

நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்ல எனக்கு !

லட்சம் ஹிட்ஸ் வாங்கிய உற்சாகம் !

1001 ஹிட்ஸ் சொக்கா ......!!!

ஆடிகொருதரம் அமவாசைகொருதரம் ....பதிவு போட்டாலும் பொறுமையாய் படித்த நண்பர்களுக்கு நன்றி .....!!!!!!!!

                   
                      நன்றியுடன்
                      கிளாமங்கலம்    விஜய .சிலம்பரசன்

"

புதன், ஜூலை 11, 2012

Over Expectation உடம்புக்கு நல்லதில்ல (பில்லா 2 முன்னோட்டம்)

              அஜித் என்ற மந்திர சொல்லுக்கு மயங்கதவர்களே இல்லை என சொல்லலாம் .opening என்ற வார்த்தை சினிமாவில் பிரபலமாவதற்கு தலதான் காரணம் .பில்லா 2 படம் மற்றுமொரு உதாரணம் ..! தலையோட ரசிகன் , படம் ரிலீஸ் ஆகும்போது சென்னையில் இருந்தான் என்றால் ..,பிறவி பயன் அடைவான் ..!அந்தளவுக்கு கொண்டாடுகிறார்கள் .

என்னடா ஓவரா சோம்பு அடிக்கிறானே அப்டின்னு பாக்ரிங்கால ...yes நானும் தலயோட வெறியன் .  வெறித்தனமா first day first show ஆழ்வார் ,பரமசிவன் ,திருப்பதி ,ராஜா,ஆஞ்சேநேய ,ஜனா இப்டி வரிசையா கொத்து வாங்கி வங்கி மரத்து போச்சு இந்த மறத்தமிழனுக்கு .(வரலாறு வந்து கொஞ்சம் ஆறுதல் தந்தது ).காஞ்சு போன ரசிகனின் கண்ணுக்கு, cooling class போட்ட பில்லா வந்த பிறகுதான் நிம்மதி .
            


ஏகன் ,அசல் இதல்லாம் mega hit ஆனதா ? என்று நீங்கள் கேட்பது என் காதில் கேட்கிறது .போங்க பாஸு நாங்கல்லாம் ஆழ்வார் யே  ஆடாம அசையாம பார்த்தோம் .


மங்காத்த என்னும் மரண ஹிட்டிற்கு பிறகு வருவதால் பில்லா 2 விற்கு ... எதிர்பார்ப்பு எகிறி கிடக்கிறது ..!தலயோட ரசிகனா  எனக்கு என்ன பயம்னா, 2 விசயத்துக்கு . 1.தல எப்பவும் ஒரு ஹிட் கொடுத்தா ரெண்டு பிளாப் கொடுக்கும் (ஷேவாக் போல ) 2. நம்ம தமிழ் கூறும் நல்லுலகம் ...படம் அப்டி இருக்குமோ இப்டி இருக்குமோ என ஏகத்துக்கும் கற்பனை பண்ணிக்கிட்டு ...படம் நல்ல இருந்தாலும் மொக்கைன்னு சொல்லிடும்மே ....!!!!

So Over Expectation உடம்புக்கு நல்லதில்ல 

திங்கள், ஏப்ரல் 30, 2012

அஜித்திற்கு யுவனின் பிறந்த நாள் பரிசு

:

அஜித்திற்கும் அவரது ரசிகர்களுக்கும் மட்டுமல்லாது இசை பிரியர்களுக்கும் செமத்தியான treat . யுவன் என்றாலே இளமை துள்ளல் இசை கேரண்டி நிச்சயம்.இதில் இன்னும் உச்சம் தொட்டிருக்கிறார் .

Gangster பாட்டில் யுவனின் குரலில் உற்சாக ஊ ல லா .இதயம் என்று ஆச்சர்ய மெலடி யும் (தபேலா+வீணை, இசைகோர்வை செம   )."மதுரை பொண்ணு" லைட் குத்து பாட்டில் யுவனின் Magic  Awesome(ரஹ்மான் டச்சோடு),"உனக்குள்ளே மிருகம் " பாட்டு முத்துகுமாரின் பேர் சொல்கிறது ,"முதல் அடியில் நடுங்க வேண்டும் ,மறு அடியில் அடங்க வேண்டும்,மீண்டு வந்தால் மீண்டும் அடி ...மறுபடி மரண அடி ...! "என்று தலையோட ரசிகர்களுக்கு உற்சாக வெறி ஏற்றும் வரிகளில் விளையாடியிருக்கிறார் .தீம் மியூசிக் முந்தய பாகத்தின் ரீமிக்ஸ் ஆனாலும் ரசிக்க வைக்கிறது.

எல்லா பாடல்களிலும் இசைகோர்வை செம ...புதிய ஓலி ,புதிய இசை கருவிகளையும் பயன் படுத்தியிருப்பது பில்லாவிற்கு யுவனின் ஸ்பெஷல் உழைப்பு தெரிகிறது. யுவன் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து விட்டார்..! 
இனி தல ........!!!!????பில்லா 2  countdown starts ........ 


செவ்வாய், ஏப்ரல் 10, 2012

ஏ .ஆர்.ரஹ்மானும்.. நானும்.. பாபா பாடல்களும்...

ரஹ்மானின் இசைக்கு நான் அடிமை ஆனது ஒன்றும் உலக அதிசயம் இல்லை  ஏனென்றல் உலகமே அதிசயமாய் பார்ப்பது ரஹ்மானை.

எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது .என் ஏழாம் வயதில் (1994 ) காதலன் படப் பாடல்கள் வெளியானது  .நான் பள்ளிக்கு வேனில் சென்று வரும்போது அதை ஒலிக்கசெய்வார்கள் .நான் அந்த டிஜிட்டல் இசையில் மெய் சிலிர்த்து கேட்டுக்கொண்டே வருவேன்.40 நிமிடத்தில் வீடு வந்துவிடும் .நானோ 80 நிமிடங்கள் ஆவாதா என வேண்டிகொண்டிருப்பேன் .அதே ஆண்டு வெளியான ரங்கீலா பாடல்களால்,நான்  ரஹ்மானின் வெறியனாகி போன இந்த சமயத்தில், DD - 1 சேனலில் ரஹ்மானின் ஹிந்தி பேட்டிஒரு சனிகிழமை இரவு ஒளிபரப்பானது.அன்றுதான் அவரை முதன் முதலாக பார்த்தது,அரைக்கை சட்டை அணிந்து நேர் வகிடெடுத்து தலை சீவியிருந்தார் . அன்று முதல் நானும் அவரைப்போல ஹேர் ஸ்டைல் வைக்க ஆசைப்பட்டேன் ஆனால் நான் படித்த பள்ளியில் உதை வாங்க பயந்து 6 ,7 வருடங்கள் கழித்து ஹேர் ஸ்டைலை மாற்றிக்கொண்டேன்.ஆனால் அதற்குள் மேஸ்ட்ரோ இரண்டு முறை தனது ஹேர் ஸ்டைலை மாற்றிகொண்டர் என்பது வேறு விஷயம் .(நம்மால ரஹ்மான் மாதிரி மியூசிக் எல்லாம் போட முடியாட்டியும் அவரை போல முடிய சீவி பாப்போமே ..)

மேஸ்ட்ரோ இசை சாம்ராஜ்யத்தின் அசைக்க முடியாத சக்ரவர்த்தியானர்.செலக்ட் செய்து பிளாப் படங்களுக்கா மியூசிக் போட்டாலும் ,உலகத்தரமான இசை என்பது யாராலும் மறுக்க முடியாது .அவரது பாடல்கள் வெளியானால் எனக்கு அது தான் தீபாவளி .


இந்நிலையில் பாபா படம் ஆரம்பம் ஆனது (2002) இசை ரஹ்மான் ..ஏகப்பட்ட பில்ட் அப் .வழக்கம் போல எப்படா வரும் மியூசிக் என்று வாயை பொளந்து கொண்டு காத்திருந்தேன் .தினமும் வகுப்பறையில் அதை பற்றியே பேச்சு .நண்பர்கள் அனைவரும் ரஜினி ரசிகர்கள் நான் உட்பட ,ஆர்வத்திற்கு கேட்கவா வேண்டும்.

ஒரு சுபயோக சுப தினத்தில் ரிலீஸ் ஆனது .அன்று மதியம் நண்பர்களோடு மதிய உணவு இடைவேளையில் சி.டி.கடைக்குசென்றோம்.(எங்க வீட்டில் அப்போது ரேடியோவே இல்ல ,நண்பனுக்கு வாங்கசென்றோம்)சி.டியை வாங்கியவுடன் நண்பன் கிளம்ப ...நானோ " மச்சான் ஒருதடவை போட்டு கேக்கலாமே" (இதற்குத்தானே ஆசைபட்டாய்..சிலம்பரசா...)கடைகாரரும் சி . டியை வாங்கி ப்ளே செய்தார்... ஒபெனிங் சாங் இடி மின்னல் என ஆரம்பம் ஆனது ..கரண்ட் கட். கிழிஞ்சது போ..!


கடுப்பாகி போன நாங்கள் ..ஏமாற்றத்தோடு திரும்பினோம் ! நான் ,ஒரு சில வினாடிகள் ஒலித்த அந்த டிஜிட்டல் இசையை பற்றியே பேசிக்கொண்டு வந்தேன்!!


மறுநாள் வகுப்பறை முழுதும் பாபா பாடல்களை பற்றிய பேச்சாகவே இருந்தது .நானோ அமைதியாய்  பெஞ்சில் தலை கவிழ்த்து கேட்டுகொண்டிருந்தேன் .


இரண்டு நாட்கள் கழித்து வழக்கம்போல் அம்மாயி வீட்டிற்கு சென்று பால் வாங்கி திரும்பும்போது, ஏழரை மச்சான் வீட்டு loud ஸ்பீக்கர் ல் பாபா படத்து பாடல்கள் ....!"yes yes yes ",என  சொல்லியபடி பனை மரத்தடியில் நின்று கேட்கலானேன்.மாயா ...மாயா.. பாட்டு ஒலித்துகொண்டிருந்தது .நான் கூஜாவை சரி செய்வதுபோல் பாசாங்கு செய்துகொண்டே..... கேட்டுகொண்டிருந்தேன்.திடிரென்று மாயா மாயாவை நிறுத்திய ஏழரை மச்சான் "எட்டு மடிப்பு சேலை"என்று கதற விட்டார்.நான் கூஜாவை பால் வழியாமல் சரிசெய்து கொண்டு கிளம்பினேன் .ஆனால் என்னையும் அறியாமல் என் கண்களில் வழிந்தது கண்ணீர்....


(பின்பு பாபா படம் வெளியாகி படு தோல்வி அடைந்ததும் ரஹ்மானின் இசையும் பெரும் விமர்சனதிர்க்குள்ளானதும்..உங்களுக்கே தெரிந்திருக்கும்)


சில வருடங்கள் கழித்து நான் DVD பிளேயர் வாங்கிய பிறகு எந்த பட்டை சத்தமாக வைத்து கேட்டிருப்பேன் என்பதை நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமா?!

எழுதியது : கிளாமங்கலம் விஜய.சிலம்பரசன்.

 

திங்கள், பிப்ரவரி 20, 2012

"முப்பொழுதும் உன் கருப்பு நாய்கள்" ( விமர்சனம்)

   என்னடா கற்பனைக்கு பதிலா  கருப்பு நாய்கள்னு தப்பா டைப் செஞ்சிருக்கானேன்னு பாக்ரிங்களா! அட போங்க..... மொக்கை படம் பாத்திருக்கேன்  ஆனா மரண மொக்கை படத்தை இப்பதான் பாக்றேன் .


டைரக்டர்  சும்மா சொளட்டி சொளட்டி அடிச்சாரு மொகரையிலேயே ! ஹீரோ அதர்வா நல்ல handsome ஆ இருக்காரு costumes எல்லாம் சூப்பர் . ஆனா நடிப்பு ?லவ் சீன்ல சமாளிச்சாலும் ஆக்ஷன் காட்சிகள் சொதப்பல் ( பாவம் அடுத்து சைக்கோ பாலாவோட படத்துல என்ன பாடு படப்போராரோ!!!) அமலா பால் பாடல் காட்சிகள்ல பயமுறுத்துது ( ஓவர்-மேக் அப் )!


படத்துல இருந்த ஒரே நல்ல விஷயம் , ரெண்டு பாட்டு(சுனந்தா,கண்கள் நீயே ).
வழக்கம் போல காப்பி அடிச்ச ஒரு பாட்டு  (Akon  's  ஹாலே ஹாலே ). ஆனா எல்லாத்துக்கும் சேர்த்து வச்சு குத்துனார் பின்னணி இசை என்ற பெயரில் . தல வலிடா சாமி.
டைரக்டர் சார் , உங்கள்ட்டே பணம் இருந்தா ... produce பன்றதோட விட்ருங்கப்பா ... ஏன் எங்க தாலிய அறுக்குரிங்க.


(எனக்கு பக்கத்து சீட்ல  ஒரு பிகரை வச்சிக்கிட்டு ஒருத்தன் ரொம்ப நேரமா பெனைஞ்சிக்கிட்டு வேற இருந்தான் ....சத்ய சோதனை )

முப்பொழுதும் உன் கருப்புனாய்கள்.. பாக்கறதுக்கு நடுநிசி நாய்கலேயே ரெண்டு தடவை பாக்கலாம்.




வியாழன், ஜனவரி 12, 2012

அவார்ட்ஸ் 2011 ( நேர்மையான விருதுகள்)

 அவார்ட் கொடுக்கும் அளவுக்கு நீ என்ன பெரிய ஆள் ம.....ரா என நீங்கள் திட்டுவது என் காதில் கேட்கிறது .

சிறந்த படம்  :                    ஆடுகளம் 


சிறந்த நடிகர் :                   தனுஷ் (ஆடுகளம்)விக்ரம்(தெய்வதிருமகள்)


மாஸ் ஹீரோ 2011 :          அஜித்குமார் (மங்காத்தா )


சிறந்த நடிகை :                   இனியா (வாகை சூட வா )


சிறந்த வில்லன் நடிகர் : ஜெயபாலன் ( ஆடுகளம்)

சிறந்த இயக்குனர் :           வெற்றிமாறன் (ஆடுகளம்)


 சிறந்த திரைக்கதை :       தியாகராஜன் குமாரவேல் (ஆரண்ய காண்டம் )


சிறந்த வசனம் :                   சாந்தகுமார் (மௌன குரு)


சிறந்த கதை:                          சரவணன் (எங்கேயும் எப்போதும் )


சிறந்த ஒளிப்பதிவு :           P .S .வினோத் (ஆரண்ய காண்டம் )


சிறந்த ஒலிப்பதிவு :         ரெங்கநாத் ரவி (நடுநிசி நாய்கள் )


சிறந்த படத்தொகுப்பு :     கிஷோர் (ஆடுகளம்)


சிறந்த இசைஅமைப்பாளர் : ஜிப்ரான் (வாகை சூட வா)


சிறந்த பின்னணி இசை :     யுவன் ஷங்கர் ராஜா ( ஆரண்ய காண்டம்)


சிறந்த பின்னணி பாடகி :  அனிதா(செங்க சூலை காரா...)


சிறந்த பாடலாசிரியர்:         வைரமுத்து( செங்க சூலை காரா...) 


சிறந்த பின்னணி பாடகர்  : G . V . பிரகாஷ் (யாத்தே யாத்தே ....)


சிறந்த ஆடை வடிவமைப்பு : வாசுகி பாஸ்கர் (மங்காத்தா)


சிறந்த கலை இயக்குனர் :          சீனு (வாகை சூட வா)


சிறந்த துணை நடிகர் :                நரேஷ்(போராளி)


சிறந்த குணசித்திர நடிகர் :    முருகதாஸ் (ஆடுகளம்,மௌனகுரு)


சிறந்த குணசித்திர நடிகை : உமா ரியாஸ் (மௌனகுரு)


சிறந்த நகைச்சுவை நடிகர் : சந்தானம் ,சூரி(போராளி)


சிறந்த நகைச்சுவை நடிகை : கோவை சரளா (காஞ்சனா)


சிறந்த சண்டை இயக்குனர் : திலிப் சுப்பராயன் (ஆரண்ய காண்டம்)


 சிறந்த பண்பலை வானொலி : ரேடியோ மிர்ச்சி 


சிறந்த பண்பலை வானொலி தொகுப்பாளர் : விக்னேஷ்காந்த் (ஆஹா FM )


 சிறந்த தொலைகாட்சி : டிஸ்கவரி தமிழ் 


சிறந்த தொகுப்பாளர் : சிவகார்த்திகேயன் (விஜய் )


சிறந்த 5  மொக்கை படம் 2011  : இளைஞன்,அவன்                 இவன்,வேங்கை,ராஜபாட்டை, வந்தான் வென்றான் .


எழுதியது கிளாமங்கலம் விஜய.சிலம்பரசன்.