என்னைப் பற்றி

எனது படம்
தஞ்சை தமிழன் ! தரணியாள பிறந்தவன் !!

திங்கள், பிப்ரவரி 20, 2012

"முப்பொழுதும் உன் கருப்பு நாய்கள்" ( விமர்சனம்)

   என்னடா கற்பனைக்கு பதிலா  கருப்பு நாய்கள்னு தப்பா டைப் செஞ்சிருக்கானேன்னு பாக்ரிங்களா! அட போங்க..... மொக்கை படம் பாத்திருக்கேன்  ஆனா மரண மொக்கை படத்தை இப்பதான் பாக்றேன் .


டைரக்டர்  சும்மா சொளட்டி சொளட்டி அடிச்சாரு மொகரையிலேயே ! ஹீரோ அதர்வா நல்ல handsome ஆ இருக்காரு costumes எல்லாம் சூப்பர் . ஆனா நடிப்பு ?லவ் சீன்ல சமாளிச்சாலும் ஆக்ஷன் காட்சிகள் சொதப்பல் ( பாவம் அடுத்து சைக்கோ பாலாவோட படத்துல என்ன பாடு படப்போராரோ!!!) அமலா பால் பாடல் காட்சிகள்ல பயமுறுத்துது ( ஓவர்-மேக் அப் )!


படத்துல இருந்த ஒரே நல்ல விஷயம் , ரெண்டு பாட்டு(சுனந்தா,கண்கள் நீயே ).
வழக்கம் போல காப்பி அடிச்ச ஒரு பாட்டு  (Akon  's  ஹாலே ஹாலே ). ஆனா எல்லாத்துக்கும் சேர்த்து வச்சு குத்துனார் பின்னணி இசை என்ற பெயரில் . தல வலிடா சாமி.
டைரக்டர் சார் , உங்கள்ட்டே பணம் இருந்தா ... produce பன்றதோட விட்ருங்கப்பா ... ஏன் எங்க தாலிய அறுக்குரிங்க.


(எனக்கு பக்கத்து சீட்ல  ஒரு பிகரை வச்சிக்கிட்டு ஒருத்தன் ரொம்ப நேரமா பெனைஞ்சிக்கிட்டு வேற இருந்தான் ....சத்ய சோதனை )

முப்பொழுதும் உன் கருப்புனாய்கள்.. பாக்கறதுக்கு நடுநிசி நாய்கலேயே ரெண்டு தடவை பாக்கலாம்.