அஜித் என்ற மந்திர சொல்லுக்கு மயங்கதவர்களே இல்லை என சொல்லலாம் .opening என்ற வார்த்தை சினிமாவில் பிரபலமாவதற்கு தலதான் காரணம் .பில்லா 2 படம் மற்றுமொரு உதாரணம் ..! தலையோட ரசிகன் , படம் ரிலீஸ் ஆகும்போது சென்னையில் இருந்தான் என்றால் ..,பிறவி பயன் அடைவான் ..!அந்தளவுக்கு கொண்டாடுகிறார்கள் .
என்னடா ஓவரா சோம்பு அடிக்கிறானே அப்டின்னு பாக்ரிங்கால ...yes நானும் தலயோட வெறியன் . வெறித்தனமா first day first show ஆழ்வார் ,பரமசிவன் ,திருப்பதி ,ராஜா,ஆஞ்சேநேய ,ஜனா இப்டி வரிசையா கொத்து வாங்கி வங்கி மரத்து போச்சு இந்த மறத்தமிழனுக்கு .(வரலாறு வந்து கொஞ்சம் ஆறுதல் தந்தது ).காஞ்சு போன ரசிகனின் கண்ணுக்கு, cooling class போட்ட பில்லா வந்த பிறகுதான் நிம்மதி .
ஏகன் ,அசல் இதல்லாம் mega hit ஆனதா ? என்று நீங்கள் கேட்பது என் காதில் கேட்கிறது .போங்க பாஸு நாங்கல்லாம் ஆழ்வார் யே ஆடாம அசையாம பார்த்தோம் .
மங்காத்த என்னும் மரண ஹிட்டிற்கு பிறகு வருவதால் பில்லா 2 விற்கு ... எதிர்பார்ப்பு எகிறி கிடக்கிறது ..!தலயோட ரசிகனா எனக்கு என்ன பயம்னா, 2 விசயத்துக்கு . 1.தல எப்பவும் ஒரு ஹிட் கொடுத்தா ரெண்டு பிளாப் கொடுக்கும் (ஷேவாக் போல ) 2. நம்ம தமிழ் கூறும் நல்லுலகம் ...படம் அப்டி இருக்குமோ இப்டி இருக்குமோ என ஏகத்துக்கும் கற்பனை பண்ணிக்கிட்டு ...படம் நல்ல இருந்தாலும் மொக்கைன்னு சொல்லிடும்மே ....!!!!
So Over Expectation உடம்புக்கு நல்லதில்ல

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக