ஷங்கர் டக்கர் என்னும் உன்னத கலைஞன் :
போதி குருமன் யாரென்று, சாரி போதி தருமன் யாரென்று இந்தியாவே எதிர் நோக்கி காத்திருக்கும் வேளையில் ஷங்கர் டக்கர் யாரென்று தெரிந்து கொள்வோமா?
நம்ம ஒரு அப்பாடக்கருங்க , ஆங்கில ஹிப் பாப் ஆல்பத்தை காப்பி அடிபதையும் , கேட்பதையுமே பெருமையாக நினைக்கும் கலிகாலத்தில் , பாஸ்டன் நகரில் பிறந்து வளர்ந்த ஷங்கர் டக்கர் , இந்திய இசையை , குறிப்பாக கர்நாடக சங்கீதத்தை காதலித்து, இசைஅமைத்து youtube channel ல் பெரிய ரசிகர் பட்டாளதையே உருவாக்கி ,இப்போது மும்பையில் வசிக்கும் ஷங்கர் டக்கர் உண்மையிலேயே பெரிய அப்பாடக்கர் தான்!!!
இந்த பாடலை நம்ம ஊரு ஆளுங்க பாடியதை கேட்டால் தலையை என்னமோ பண்ணும் , ஆனால் நம்ம ஷங்கரின் இசை அமைப்பில் கேக்கும்போது அடடா இதயத்தை என்னவோ செய்கிறது ! இந்த பாடலை பாடியிருக்கும் வித்யா -வந்தனா அவ்ளோ அழகு !!
Hariprasad Chaurasia, Zakir Hussain, John Mclaughlin, Radio Head, AR Rahman ஆகியோரின் ஆசிபெற்றவர் !!!
நம்ம AR Rahman ன் முன்பே வா பாடலை ரீமிக்ஸ் இல்லை ரீமேக் செய்திருக்கும் நேர்த்தியை பாருங்கள் (எல்லா இசை கருவியும் இவரே வாசித்திருப்பார் !!
I love you Shankar Tucker.
எழுதியது கிளாமங்கலம் விஜய.சிலம்பரசன் .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக